தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரத போராட்டம்

தமிழர் தாயகத்தில் காணாமல் போன தமது உறவுகளை கண்டுபிடித்து தருமாறும் தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென்ற உண்மையை வெளிப்படுத்துமாறும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்குமாறும் வலியுறுத்தி வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழ் அரசியல் கைதிகள் இன்று (வியாழக்கிழமை) ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு மகசின் சிறைச்சாலையிலுள்ள 80 பேரும், அநுராதபுர சிறைச்சாலையில் உள்ள 18 பேரும் கண்டி போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேரும் யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 பேரும் அவ்வாறே ஏனைய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் இவ் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பில் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார்.

காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு பல வருடங்கள் கடந்தும் எவ்வித தீர்வையும் வழங்காமல், இன்று சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை நடத்தும் நிலைக்கு அரசாங்கமே அவர்களை தள்ளியுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts