உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக சட்டமா அதிபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.
உண்ணாவிரதம் இருக்கும் 13 தமிழ் அரசியல் கைதிகள் இன்றைய தினம் சிறைச்சாலையினால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் இதன்போது, குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானது என்பதால் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அரச தரப்பு சட்டத்தரணி கூறினார்.
இதன் காரணமாக அவர்களை விடுதலை செய்வதற்கோ பிணை வழங்குவதற்கோ தற்சமயம் தீர்மானிக்க முடியாது என்று அரச தரப்பு சட்டத்தரணி கூறினார்.
நீதிமன்றில் தெரியப்படுத்தப்பட்ட விடயங்களை பரிசீலித்துப் பார்த்த கொழும்பு மேலதிக நீதவான் எரணி ஆட்டிகல, சந்தேக நபர்களை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.