தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கின்றது

அநுராதபுரம் சிறைச்சாலையில் நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.

இதுவரை எந்தவொரு தீர்வும் கிடைக்காத நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களது விடுதலையை வலியுறுத்தி கடந்த புதன்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியும், பல வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீதான வழக்குகள் தமிழ் பிரதேசங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப்போராட்டம் தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை தெரியப்படுத்தியதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் செயற்பாட்டாளரான அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

Related Posts