தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுப் படுத்துமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில் இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) காலை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதன் போது, தமது உறவுகளுக்கு நீதி வேண்டும், அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவு படுத்து உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொது மக்கள், அரசியல்வாதிகள் என பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.
இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணம், வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.