தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது!

அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது.

தங்களை விடுவிக்குமாறு அல்லது புனர்வாழ்வளிப்புக்கு உட்படுத்துமாறு கோரி கடந்த 14ஆம் திகதி 8 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் ஒருவர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பல அரசியல் தலைவர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் சென்று சந்தித்து வருகின்றனர்.

Related Posts