தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் யாழ்.பல்கலையில் கலந்துரையாடல்!

“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை – முழுமையான சட்டக் கொள்கை நிலைப்பாட்டை நோக்கி” எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நடைபெற்றது.

அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை, சமகால சட்ட விடயங்களுக்கான அரங்கம் ஆகியன இணைந்து இந்தக் கலந்துரையாடலை நடத்தியது.

அடையாளம் அமைப்பால் இது தொடர்பில் அண்மையில் வெளியிட்ட அறிக்கையை ஒட்டி பிரதான உரையை அடையாளத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் யாழ் பல்கலைக்கழக சட்டத் துறைத் தலைவருமான குமாரவடிவேல் குருபரன் வழங்கினார்.

பிரதான பதிலுரையை அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கம் அமைப்பாளர் அருட்பணி ம.சக்திவேல் வழங்கினார்.

தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்று வருகின்றது.

Related Posts