தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் போராட்டம்!

தமிழ்நாடு பரமாத்தி திருச்செங்கோட்டை அகதிமுகாமில் வாழும் ஈழத் தமிழ் அகதிகள் போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.

india

இந்த முகாமில் வசிக்கின்ற 2000க்கும் அதிகமான ஈழ அகதிகளுக்கு கடந்த இரண்டு மாதங்களாக அகதி நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் கொடுப்பனவை வழங்கக்கோரி போராட்டம் நடாத்தப்பட்டதாகத் தெரியவருகின்றது. மேலும், தமிழ் நாட்டு அரசாங்கத்தால் குடும்பத் தலைவருக்கு மாதம் 1000 ரூபாவும், 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு 750ரூபாவும், 12வயதிற்குட்பட் சிறுவர்களுக்கு 400 ரூபாவும் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக அந்தக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தே அந்த மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனையடுத்து, அந்தக் கொடுப்பனவை மீள வழங்க தாம் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதிக்கமையவே தற்போது போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

Related Posts