தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் – இந்திய வானிலை அதிகாரி

தென்னிந்தியாவின் கடலோர பகுதிகளில், குறிப்பாக தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளிலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் 72 மணி நேரத்துக்கு தொடர்ந்து மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதன்பிறகு மழையின் அளவு குறைந்தாலும் ஒரு வாரத்துக்கு மழை நீடிக்கும் என்றும் மத்திய வானிலை துறையின் டைரக்டர் ஜெனரல் எல்.எஸ்.ரத்தோர் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் வேலூரில் வழக்கத்தை விட 139 சதவீதமும், சென்னையில் 89 சதவீதமும் அதிக மழை பெய்து இருப்பதாகவும் அவர் கூறினார்.தென் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மேலும் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் நிலைமை சற்று கவலை அளிப்பதாகவும் எஸ்.எஸ்.ரத்தோர் தெரிவித்தார்.

Related Posts