இலங்கையில் தமிழர்கள் படும் துன்பத்தை துடைக்க இங்கிருந்து குரல் கொடுக்கிறோம். அரசியல் கட்சி தலைவர்கள் போராடுகிறார்கள், அறிக்கை விடுகிறார்கள். மாணவர்கள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். ஆனால் நாமே கதி என்று நம்பி நம் நாட்டுக்கு வந்த இலங்கை அகதிகளை எப்படி வைத்திருக்கிறோம்.
இலங்கை அரசை போலவே முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறோம். அவர்களை சந்தேக கண்ணோடு பார்க்கிறோம். தொப்புள்கொடி உறவு என்று சொல்கிறோமே இங்கிருக்கும் இலங்கை தமிழனுக்கு ஒரு வாய் சோறு கொடுத்திருப்போமா. அதை சொல்கிற, அவர்கள் வாழ்க்கையை சொல்கிற படம்தான் “ஆனந்த மழை” என்கிறார் இயக்குனர் சுப.தமிழ்வாணன்.
இயக்குனரே ஹீரோக்களில் ஒருவராக நடித்திருக்கிறார். அதுதவிர ஜெய் ஆனந்த், களஞ்சியம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள், தீபிகா என்ற புதுமுகம் ஹீரோயின். ஸ்டீபன் ராயல் இசை அமைத்திருக்கிறார், கணேஷ்ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.