தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றவர்களுக்கு நடந்த சோதனை!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பிரசார கூட்டத்துக்கு வருகைதந்த பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் பொலிஸார் தீவிர பரிசோதனையின் பின்னரே உள்ளே செல்வதற்கு அனுமதித்த செயற்பாடு பலர் மத்தியில் விசனத்தை தோற்றுவித்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றிய மாபெரும் பிரசார கூட்டம் மாலை 6 மணிக்கு புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலயத்தில் நடைபெற இருந்த நிலையில், அங்கு வருகைதந்த பொதுமக்கள் ஊடகவியலாளர்கள் அனைவரும் பூரண உடல் பரிசோதனை மற்றும் உடமைகள் அனைத்தும் பரிசோதனை மேற்கொள்ள பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்க பட்டதை அவதானிக்க முடிந்தது.

இதனால் கூட்டத்துக்கு வருகைதந்த மக்கள் எமது கூட்டத்துக்கு வருகைதரும் எமக்கே பரிசோதனை, இது என்ன நிலைமை என விசனம் தெரிவித்ததை அவதானிக்க முடிந்தது.

Related Posts