தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புலிகளின் பங்களிப்பு இருந்தது: சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களால் இயன்றளவு பங்களிப்புக்களை செய்திருக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி கிளையினருடனான சந்திப்பு நேற்று (புதன்கிழமை) கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் கலந்து கொண்டு, கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை யார் உருவாக்கினார்கள் என்பது முக்கியமல்ல என்றும் கூட்டமைப்பில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயற்பட்டு இருக்கின்றோம் என்பது உண்மை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கூட்டமைப்பின் பெயரை சொல்லியே தாம் அரசியலில் தம்மை அடையாளம் காட்டி இருக்கின்றோம் என்றும் தமிழரசு கட்சியின் சார்பில் தாம் தற்போது அரசியலில் ஈடுபடவில்லை என்றும் இதன் போது அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts