பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார்.
சிலாபத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பில் அவர் அங்கு மேலும் தகவல் வெளியிடுகையில்:
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட குழுவினருடன் மைத்திரிபால சிறிறசேன இரகசிய உடன்பாட்டில் கைச்சாத்திட்டிருக்கிறார்.
இந்த விடயம் குறித்து நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். இதனை மக்களுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டியுள்ளது. எதிர்வரும் தேர்தலில் நான் தோற்கடிக்கப்படுவதை விரும்பும் வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவுக் குழுக்கள் தன்னை ‘ஹேக்’கிற்கு கொணடுசெல்ல விரும்புகின்றனர்.
எனினும் பொதுமக்கள் எனக்கு அவ்வாறான நிலை ஏற்பட அனுமதிக்க மாட்டார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் நாட்டில் முன்னெடுக்கப்படும் பெரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துடன், தனது புதல்வர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.