தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது தமிழ் மக்­களின் ஏக பிர­தி­நிதி அல்ல – கெஹெ­லிய

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது தமிழ் மக்­களின் ஏக பிர­தி­நிதி அல்ல. எனவே அர­சியல் தீர்வு அல்­லது 13 ஆவது திருத்தச் சட்டவிவ­காரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் அர­சாங்­கத்­துக்கு நேர­டி­யாக பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தவே முடி­யாது என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும்அமைச்­ச­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெலதெரி­வித்தார்.

Keheliya-Rambukwella

தென்­னா­பி­ரிக்­காவின் விசேட பிர­தி­நிதி ரம­போஷா இலங்­கைக்கு வருகை தந்­தாலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வுக்கு வந்­தால்தான் தீர்வு சாத்­தியம். கூட்­ட­மைப்­புடன் மட்டும் தனித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினால் அது ஏனைய கட்­சி­க­ளுக்கு செய்­கின்ற அநீ­தி­யா­கி­விடும் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

ஊட­கத்­துறை அமைச்சில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறி­ய­தா­வது:

தமிழ்த் தேசியக் கூட்­டமைப்­பா­னது தமிழ் மக்­களின் ஏக பிர­தி­நி­திகள் அல்ல. எனவே அர­சியல் தீர்வு விவ­காரம் மற்றும் அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் ஆகிய முக்­கி­யத்­துவம் வாய்ந்த விட­யங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் அர­சாங்கம் தனித்து பேச்­சு­வார்த்தை நடத்த முடி­யாது. அதற்­கான சாத்­தி­யங்­களே இல்லை.

வடக்கு கிழக்கில் யாழ்ப்­பா­ணத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பிர­தான கட்­சி­யாக இருக்­கலாம். ஆனால் இந்த நாட்டைப் பொறுத்­த­வரை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது தமிழ் மக்­களின் ஏக பிர­தி­நி­திகள் என்று கூற முடி­யாது.

இந்­நி­லையில் ஏக பிர­தி­நி­திகள் அல்­லாத கூட்­ட­மைப்­புடன் அர­சாங்கம் தனிப்­பட்ட ரீதியில் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தாது என்­ப­தனை தெளி­வாக குறிப்­பி­டு­கின்றோம். அந்­த­வ­கையில் இந்த தேசிய முக்­கி­யத்­துவம் வாய்ந்த விட­யங்­களை ஆராய்­வ­தற்கு கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வுக்கே வர­வேண்டும்.

தென்­னா­பி­ரிக்­காவின் விசேட பிர­தி­நிதி சிரில் ரம­போஷா அடுத்­த­வாரம் இலங்கை வரு­கின்றார். ஒரு நாடு நேர்­மை­யான முறையில் உத­விக்­கரம் நீட்­டும்­போது அதனை நாங்கள் வர­வேற்போம். ஆனால் ரம­போ­ஷாவின் நிகழ்ச்சி நிரல் குறித்து எனக்கு இன்னும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

எவ்­வா­றெ­னினும் ரம போஷா இலங்­கைக்கு வருகை தந்­தாலும் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வு­ககு வந்­தால்தான் தீர்வு சாத்­தியம் என்­ப­தனை தெளி­வாக குறிப்­பி­டு­கின்றோம்.

கேள்வி : வடக்கில் கூட்­ட­மைப்பு ஏக பிர­தி­நி­திகள் தானே?

பதில் : யாழ்ப்­பா­ணத்தில் மட்டும் பிர­தான கட்­சி­யாக இருக்­கலாம். ஆனால் முழு நாட்­டி­னதும் தமிழ் மக்­களை பொறுத்­த­மட்டில் கூட்­ட­மைப்பு ஏக பிர­தி­நி­திகள் அல்ல.

கேள்வி : மூன்றாம் தர்­புக்கு இட­மில்லை என்று ஆரம்­பத்தில் கூறப்­பட்­டது. தற்­போது தென்­னா­பி­ரிக்க தலை­யீடு?

பதில் : நேர்­மை­யான முறையில் உதவி செய்ய முன்­வ­ரு­கின்­றனர்.

கேள்வி : ஆளும் கட்­சியில் உள்ள சில கட்­சிகள் ரம­போ­ஷாவின் விஜ­யத்தை எதிர்த்­துள்­ள­னவே?

பதில் : ஒரு நாடு உதவிக் கரம் நீட்­டும்­போது அதனை நாங்கள் வர­வேற்போம். எவ்­வா­றெ­னினும் ரம­போ­ஷாவின் நிகழ்ச்சி நிரல் எனக்கு தெரி­யாது. வெளி­வி­வ­கார அமைச்சு என்­ககு அறி­வித்­ததும் நான் கூறு­கின்றேன். உத­வி­க­ளையும் ஆலோ­ச­னை­க­ளையும் பெறுவோம். ஆனால் பிர­தான விட­யத்தில் நாங்­களே தீர்­மானம் எடுப்போம்.

கேள்வி : ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைப் பேரவை விசா­ர­ணையை நடத்­தப்­போ­கின்­றது. இலங்கை என்ன செய்­யப்­போ­கின்­றது?

பதில் : நவ­நீதம் பிள்­ளையின் அறிக்­கை­யையும் பிரே­ர­ணை­யையும் நாங்கள் எதிர்த்­து­விட்டோம். வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் பீரிஸ் அதனை பகி­ரங்­க­மாக கூறி­விட்டார். இந்­நி­லையில் அவ்­வாறு எதிர்த்­ததன் பின்னர் நடக்­கின்ற எந்த விட­யத்­து­ககும் நாங்கள் பொறுப்­பாக முடி­யாது.

கேள்வி : சாட்சி வழங்­கு­கின்­ற­வர்கள் பழி­வாங்­கப்­ப­டக்­கூ­டாது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. சாட்­சியம் வழங்­கு­கின்­ற­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டுமா?

பதில் : அதன் சட்­டத்­தன்மை குறித்து ஆரா­ய­வேண்டும்.

கேள்வி : கூட்­ட­மைப்பு சாட்­சியம் வழங்­க­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளதே?

பதில் : எமக்கும் அறியக் கிடைத்­தது.

கேள்வி : விசா­ரணைக் குழுவை இலங்­கைக்குள் அனு­ம­திக்­கா­ததன் மூலம் புலிகள் செய்த அட்­டூ­ழி­யங்கள் மறைக்­கப்­ப­டு­கின்­றதே?

பதில் : புலிகள் கள மட்­டத்தில் தோற்­க­டிக்­கப்­பட்­டு­விட்­டனர். அது­மட்­டு­மல்ல அவர்கள் செய்த அட்­டூ­ழி­யங்­களை நாங்கள் உல­குக்கு காட்­டி­விட்டோம். இந்­நி­லையில் இந்த விவ­காரம் குறித்து விசா­ரணை ஒன்று அவ­சியம் இல்லை என்­பதே எமது நிலைப்­பா­டாகும். தற்­போது முடிந்த போன புலி­களின் கதை­யைக்­கொண்டு வந்து எங்கு வரப்­பார்க்­கின்­றனர் என்று எங்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும்.

கேள்வி : கே.பி. அர­சாங்­கத்­துடன் உள்­ளதால் இவ்­வாறு கூறு­கின்­றீர்­களா?

பதில் : 12 ஆயிரம் முன்னாள் போரா­ளிகள் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்டு சமூ­கத்­துடன் இணைக்­கப்­பட்­டு­விட்­டனர். முன்னாள் போரா­ளிகள் பாரா­ளு­மன்­றத்தில் உள்­ளனர். யுத்­தத்தின் பின்னர் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள விட­யங்கள் குறித்து நாங்கள் மகிழ்ச்­சி­ய­டை­கின்றோம். இந்­நி­லையில் விசா­ரணை செயற்­பா­டுகள் அவ­சி­ய­மில்லை என்றே கூறு­கின்றோம்.

கேள்வி பேரு­வ­ளையில் நடை­பெற்ற ஆளும் கட்சி கூட்­டத்தில் என்ன விட­யங்கள் பேசப்­பட்­டன?

பதில் : அது ஒரு திறந்த கலந்­து­ரை­யாடல் என்று கூறலாம். பல்­வேறு விட­யங்கள் குறித்துப் பேசப்­பட்­டன. கருத்­துக்கள் பறி­மா­றப்­பட்­டன. அபி­வி­ருத்­திகள் அர­சியல் செயற்­பா­டுகள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து ஆரா­யப்­பட்­டுள்­ளது. அது ஒரு சிறந்த கலந்­து­ரை­யாடல் என்று கூறலாம்.

கேள்வி: பாரா­ளு­மன்­றத்தின் காலத்தை நீடிக்க சர்­வ­ஜன வாக்கெடுப்பு நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதா?

பதில் : ஒருபோதும் இல்லை.

கேள்வி: கச்சதீவை மீட்பது குறித்தும் மீண்டும் இந்தியாவில் பேசப்பட்டுள்ளதே?

பதில் : கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதனை இந்திய மத்திய அரசாங்கம் தெளிவாக குறிப்பிட்டுவிட்டது. அரசியலுக்காக எதனையாவது கூறிக்கொண்டிருப்பார்கள்.

கேள்வி : ஊவா மாகாண சபை எப்போது கலைக்கப்படும்?

பதில் விரைவில் கலைக்கப்படும்.

கேள்வி: எப்போது தேர்தல் நடத்தப்படும்?

பதில் : அடுத்த தேர்தல் ஊவா மாகாண சபைத் தேர்தலேயாகும்.

கேள்வி : தேசிய மட்டத் தேர்தல்களில் பாராளுமன்ற தேர்தலா? அல்லது ஜனாதிபதித் தேர்தலா? எது முதலில் நடத்தப்படும்?

பதில் :முதலில் ஊவா மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்.

Related Posts