தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பெருவெற்றியுடன் வட மாகாண சபையினை கைப்பற்றியது!

வடமாகாணசபை தேர்தல் 2013 இல் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பெருவெற்றியுடன் வட மாகாணசபையினை கைப்பற்றி விட்டது.முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் அடுத்த சிலதினங்களில் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாக வாக்குகளை பெற்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கூடிய ஆசனங்களை பெற்றுள்ளது. இதுவரை முழுமையாக பெறுபேறுகள் வெளியிடப்பட்ட முடிவுகளின்படி முல்லைத்தீவில் அங்கு உள்ள 5 ஆசனங்களில் 4 இனையும் கிளிநொச்சியில் அங்குள்ள 4 ஆசனங்களில் 3 இனையும் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் கைப்பற்றிவிட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள 10 தொகுதிகளாகிய மானிப்பாய் ,வட்டுக்கோட்டை,உடுப்பிட்டி காங்கேசன்துறை,ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்,நல்லூர்,சாவகச்சேரி,பருத்தித்துறை ஆகியவற்றில் அவற்றினை மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் கைப்பற்றிவிட்டது..யாழ் மாவட்டத்தில் இந்த 10 தொகுதிகளுக்காகவும் 16 ஆசனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு 14 ஆசனங்கைள கூட்டமைப்பு கைப்பற்றிவிட்டது.அரசின் இணைப்பு கட்சியான ஈ.பி.டி.பி யின் கோட்டையான ஊர்காவற்துறை தொகுதியினை மிகப்பெரிய வித்தியாசத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வெற்றிகொண்டிருப்பது முக்கிய விடயமாக கருதப்படுகிறது.

ஏனைய மாவட்டங்களாக வவுனியா மன்னார் மாவட்டங்களில் உள்ள மொத்த 11 ஆசனங்களுக்கான தேர்தலில் 7 ஆசனங்களை கூட்டமைப்பு கைப்பற்றியது.

இறுதியான தகவலின் படி போனஸ் 2 உட்பட்ட 38 ஆசனங்களில் 30 னை தமழ்த்தேசிய கூட்டமைப்பு பெற்றுள்ளது. அரசு தரப்பு 8 ஆசனங்களை மட்டும் கைப்பற்றியுள்ளது.முதலமைச்சர் வேட்பாளர் விக்கினேஸ்வரன் கூட்டங்களில் தமிழ்மக்களிடமிருந்து 30 ஆசனத்தெரிவுகளையே கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இது அரசுக்கு படுதோல்வியாக கருதப்படுகிறது. உரிமையா அபிவிருத்தியா என்ற கேள்ளிவக்கு மக்கள் உரிமையே முக்கியம் என வாக்களித்திருக்கின்றனர்.

ஏற்கனவே வெளியாகிய அரச ஊழியருக்கான தபால் மூல வாக்களிப்பு முடிவுகளில் சகல மாவட்டங்களிலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பெருவெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதில் மொத்தமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு 11228 வாக்குககளும் ஐ.ம.சு.மு வாக்குகளும் 2136 ஐ.தே.க 238 வாக்குகளும் மு.காங் 159 வாக்குகளும் பெற்றிருந்தன. தொகுதிவாரியான இறுதிமுடிவுகளில் தபால் மூல வாக்களிப்பு உள்ளடக்கப்பட்டுவிடும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முழுமையான தேர்தல் முடிவுகள் இங்கே

Related Posts