தமிழ்தேசிய மக்கள் முன்ணிக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டியவர் மின்சாரம் தாக்கி பலி!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் முத்துவிநாயகபுரம் பகுதியில் சுவரொட்டி ஒட்டும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (24) இரவு இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முத்துவிநாயகபுரம் முத்தையன்கட்டு பகுதியில் தமிழ்தேசிய மக்கள் முன்ணிக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்ட முற்பட்டவர் காணி வேலியில் இணைக்கப்பட்ட மின்சார இணைப்பினால் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த மின்சார வேலி காணி உரிமையாளரால் யானைகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக பொருத்தப்பட்டிருந்த வேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

முத்துவிநாயகபுரம் முத்தையன்கட்டு ஒட்டுசுட்டானை சேர்ந்த 45 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஒட்டுசுடுட்டான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

குறித்த காணியின் உரிமையாளர் அனுமதிபெற்று மின்சார வேலி அமைத்தாரா என்பது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

Related Posts