தமிழ்க் கூட்டமைப்பு பிரகடனப்படுத்தியுள்ள புலிகள் இல்லாத தமிழ்த் தேசியம்

–தயாளன்–

உப்பில்லாமல் சமைத்துவிட்டு எனது சமையலை ருசிக்க வாருங்கள் என்று அழைத்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் ? இவ்வாறான அழைப்பைத் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு விடுத்துள்ளது. “ புலிகள் இல்லாத தமிழ்த் தேசியம் ‘ என்பதைத் தான் இக் கட்சி பிரகடனப்படுத்தியுள்ளது. நல்லது அப்படியே “ புலிகளின் மாவீரர் குடும்பங்கள் முன்னாள் போராளிகள் அரசியல் கைதிகளின் குடும்பங்களின் வாக்குகள் எமக்குத் தேவையில்லை. அவர்கள் தாங்கள் விரும்பிய எவருக்கும் வாக்களிக்கலாம் ஏனையோர் எமக்கு வாக்களியுங்கள் “ என்று தங்களின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துவார்கள் ஆயின் இவர்களை நேர்மையான அரசியல்வாதிகள் என்று தமிழினம் ஒப்புக்கொள்ளும்.

பாராளுமன்றத்தை வீடாகவும் புலிகளின் குடும்பங்களின் வாக்குகளைச் செருப்பாகவும் தான் கூட்டமைப்பு நோக்குகிறது. செருப்பு காலுக்கும் பாதுகாப்பாக இருக்கும். வெயிலிருந்து சேறிலிருந்து கல் முள் என்பவற்றில் இருந்து காலைப் பாதுகாக்கும். ஆனால் வீட்டுக்குள் நுழையும் போது அதைக் கழற்றி வெளியில் வைத்துவிட்டுத் தான் செல்வர். அதே நிலைப்பாட்டைத் தான் கூட்டமைப்பு புலிகள் விடயத்தில் எடுத்துள்ளது. புலிகள் சம்பந்தப்பட்ட அனைவரது வாக்குகளும் சிந்தாமல் சிதறாமல் கூட்டமைப்புக்கே வேண்டும். ஆனால் எந்த வடிவத்திலும் அவர்கள் சம்பந்தப்பட்டோர் பிரதிநிதித்துவம் கோரக்கூடாது என்பதே சம்பந்தன் ஜயா மாவையின் நிலைப்பாடு.

திருமலையின் முன்னாள் அரசியல்துறைப் போராளி ரூபன் ( ஆத்மலிங்கம் ரவீந்திரா ) சிறந்த நிர்வாகி இவர் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதே பல முன்னாள் போராளிகள் மாவீரர் குடும்பங்களின் விருப்பமாக இருந்தது. போரால் சிதைவடைந்துள்ள தமது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான ஏற்பாடுகளை திட்டங்களை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவார்கள் என்பது அவர்கள் நம்பிக்கை.

புலம்பெயர் தேசங்களுக்குச் செல்லும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் போரால் சிதைவடைந்த எமது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவென என்று சொல்லி நிதியுதவிகளைப் பெறும் போது குறிப்பாக மாவீரர் முன்னாள் போராளிகள் குடும்பங்களையும் சுட்டிக்காட்டித் தான் பெறுகிறார்கள். இவர்கள் நிதியுதவி கோரும் போது இதிலிருந்து புலிகள் சம்பந்தப்பட்ட எவருக்கும் உதவ மாட்டோம் என்று சொல்லிப் பார்க்கட்டும் எத்தனை சதம் கிடைக்கின்றதெனப் பார்ப்போம் குறிப்பாகப் புலிகளைத் திட்டித் தீர்க்கும் மட்டு முன்னாள் எம்.பி யோகேஸ்வரன் புலிகளின் செயற்பாட்டைப் பாராளுமன்றத்தில் பயங்கரவாதம் எனக் குறிப்பிட்ட அரியநேத்திரன் கிளிநொச்சி நீதிமன்றில் ஒரு தரப்பினரை இவர்கள் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர்;கள் என்றெல்லாம் கூறிய சுமந்திரன் போன்றோர் இதனைக் கூறட்டும்.

வாக்குக் கேட்கவும் நிதிசேகரிக்கவும் புலிகள் என்ற பதம் தேவை இவர்களுக்கு தமிழ்த் தேசியம் சர்வதேசம் தியாகம் புனர்வாழ்வு என்ற நான்கு பதங்களும் இல்லாவிட்டால் இவர்களால் அரசியல் செய்ய முடியாது. இந் நிலையில் முன்னாள் புலிகள் அரசியலுக்குள் வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் அக்கறை காட்டுகிறார்கள். 2000 ஆண்டுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி திருமலையில் 13000 வாக்குகளை மட்டுமே பெற்று தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இழந்தது. இதனால் அதனை மீண்டும் ஏற்படுத்தும் பொருட்டு ரூபனை மீண்டும் அரசியல் பொறுப்பாளராக அனுப்பினார் பிரபாகரன். அடுத்த ஆண்டு 66500 வாக்குகளைப் பெற்று மீண்டும் பாராளுமன்ற உறுப்பினரானார் சம்பந்தன். அந்த நன்றியாவது இருக்க வேண்டாமா அவருக்கு. தனக்கு வேட்பாளர் நியமனம் கிடைக்குமிடத்து திருமலையில் இருந்து இரு பிரதிநிதிகள் தெரிவாகக் கூடிய சூழ்நிலையை தன்னால் ஏற்படுத்த முடியும் என்று குறிப்பிட்ட ரூபனுக்கு முன்னாள் புலி என்ற ஒரேயொரு காரணத்தைத் தவிர வேறெதையும் சொல்ல முடியாத நிலையில் நியமனத்தை மறத்துள்ளார் அவர். இதேவேளை பொறியியல்பீட மாணவனான முத்துச்சாமி மருத்துவபீட மாணவனான சுதர்சன் ஆகிய மாவீரர்களை நினைவு கூரும் கட்டுரை ஒன்றை வெளியிட்ட போது அதனை தனது முகநூலில் இணைத்துள்ளார் அரியநேத்திரன். அதற்கு ஒருவர் “ இப்போது தானா உங்களுக்கு புலிகள் நினைவுக்கு வந்துள்ளனர். இவர்களில் யாராவது ஒரு குடும்பத்திலிருந்து ஒருவரை எம்.பியாக்க முடியுமா? “ என்று விமர்சனம் எழுதியுள்ளார். அது மட்டுமல்ல மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் கடந்த நிகழ்வில் இப் பாடசாலையில் கல்வி கற்ற அனேகர் மாவீர்hகளாக உள்ளனர் என்று நினைவு கூர்ந்திருக்கிறார். பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது பயங்கரவாதிகளாகத் தெரிந்த புலிகள் தேர்தல் வரும் போது மாவீரர்களாகத் தெரிகின்றனர். அரியநேத்திரனுக்கு உலக நடிப்படா சாமி.

சர்வதேசம் என்ற சொல்லையும் இவர்கள் உச்சரிக்கிறார்கள். தமிழரின் பிரச்சினையை சர்வதேசத்துக்குக் கொண்டு சென்றது யார். ? 1977 தேர்தல் தந்தை செல்வாவின் சமாதியில் “ தமிழீழக் கோரிக்கையை கைவிடமாட்டோம் “ என்று சத்தியபிரமாணம் செய்து போட்டியிட்டனர் சம்பந்தன் முதலானோர் போட்டியிட்டனர். தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக இவர்களைத் தேர்ந்தெடுத்ததனால் எதிர்க்கட்சித் தலைவராக திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவானார். இத் தேர்தலில் தமிழரின் பிரச்சினையை சர்வதேசத்துக்குக் கொண்டு செல்வோம் என்றும் கூறினார் இவர்கள். இவர்களின் முதல் வெளிநாட்டுப் பயணம் லண்டனுக்காக இருந்தது. ஆகவே லண்டனில் தமிழீழக் கோரிக்கையை தமிழரின் பிரச்சினையை எந்தளவுக்கு அங்கே கொண்டு சென்றார்கள். என்பதை அறிய பத்திரிகையாளர்கள் முயன்றார்கள். இந்தப் பயணம் குறித்து என்ன கூறுகிறீர்கள் என தமிழ் மகளிர் பேரவைத் தலைவி திருமதி மங்கையற்கரசி வருவதுதான் கவலையாக இருக்கிறது. “ என்று கூறினார். இதுதான் இவர்களது சர்வதேசப் பிரச்சாரம்.

புலிகளின் காலத்தில் அவர்கள் மூலம் எம்.பியான அரியநேத்திரனை பரப்புரைகளுக்காக வெளிநாட்டுக்கு அனுப்பினால் கூடவே மகனையும் அழைத்துக் கொண்டு போய் அரசியல் அடைக்கலம் கொடுத்து விட்டு பாராளுமன்றில் பயங்கரவாதிகள் என்று கூறுகிறார். சுவிஸில் மாவை “ கிளிநொச்சியில் பிரபாகரனைச் சந்தித்தது மறக்க முடியாத நிகழ்வு” என்று நடிக்கிறார். அதேவேளை ரூபனுக்கு கதவடைக்கிறார். 1977 பொதுத் தேர்தல் முடிவடைந்ததும் காசி அண்ணா “ இந் நாட்டின் பாராளுமன்றக் கதவுகள் மூடப்பட்டாலும் சிறைக் கதவுகள் எனக்காகத் திறந்தே இருக்கின்றன “ எனக் குறிப்பிட்டார். புலிகள் இருக்க வேண்டிய இடம் சிறைதான் என்பதால் தான் அவர்கள் வெளியில் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களின் விவகாரத்தை ஏகபோகமாக கையாள சுமந்திரனை நியமித்தார் களுத்துறை மகசீன் சிறைகளில் சுமந்திரன் நடித்த நடிப்பை நடிகர் திலகம் சிவாஜி;கணேசன் உயிருடன் இருந்து பார்த்திருந்தால் தற்கொலை செய்து கொண்டு இறந்திருப்பார். இதற்குள் அமைச்சரவைப் பத்திரம் என்ற நாடகமும் வேறு.

போர் இடம்பெற்ற காலத்திலும் சரி போர்க் குற்றங்கள் தொடர்பான ஆவணங்களைத் திரட்டுவதிலும் சரி ஒரு துரும்பையாவது எடுத்துப் போட்டார்களா இவர்கள். போதாக் குறைக்கு உள்ளக விசாரணையால் கூடுதல் நன்மை என்று விளக்கமும் கொடுத்தார் கிரிக்கெட் வீரர் சுமந்திரன். இவர்களால் சர்வதேச மட்டத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட எமது பிரச்சினையின்; கனதியைக் குறைக்கத்தான் முடியுமே தவிர வேறெதுவும் செய்ய முடியாது.

எனவே என்ன செய்ய வேண்டும் என்பதை எமது மக்கள் தீர்மானிக்கட்டும். அடுத்து என்ன செய்வது என்பதை ரூபன் தீர்மானிக்கட்டும். அவரது தீர்மானத்துக்கு ஒத்துழைப்போர் தங்கள் கருத்துக்களை இணையங்கள் மூலமாக வெளியிடுங்கள். இதேவேளை 1981 பொதுத் தேர்தலில் ஈரோஸ் போட்டியிட்ட போதும் தங்கத்துரை போட்டியிட்ட போதும் சம்பந்தன் ஜயா தோற்றிருக்கிறார். தங்கத்துரையின் மறைவுக்குப் பின்னரே விருப்பு வாக்கு அடிப்படையில் அவர் மீண்டும் தெரிவானார். எனவே தோல்வி என்பது அவருக்குப் புதிதல்ல தந்தை செல்வா சமாதியில் செய்த சத்தியத்தை திருமலை மணிக்கூட்டுக் கோபுரத்தடியில் எந்தக் கொடிக்கெதிரான நடவடிக்கையின் போது நடேசு உயிர் நீத்தார் என்பதையும் ரூபனின் உதவியையும் அவர் மறந்திருக்கலாம். ஆனால் திருமலை மக்கள் மறக்கமாட்டார்

Related Posts