இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர் கமல்ஹாசன். இவர் திரையில் ஜொலித்து கொண்டிருக்கும் போதே, அவரது மூத்த மகள் ஸ்ருதி சினிமாவில் காலடி எடுத்து வைத்து வெற்றி பெற்றார்.
தற்போது அவருடைய இரண்டாவது மகளான அக்ஷராவும் ஹிந்தியில் தனுஷ்க்கு ஜோடியாக ஷமிதாப் படத்தில் விரைவில் அறிமுகமாகவிருக்கிறார்.
ஆனால், அவருக்கும் அப்பா, அக்கா போல தமிழில் கால் பதிக்க தான் ஆசையாம், அதனால் விரைவில் ஒரு தமிழ் படத்தில் நடிக்க தீவிரமாக கதையை கேட்டு வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.