இனவாத போக்கினை உடையவர்கள் வேறு கட்சி உருவாக்க வேண்டுமென்று கூறிவருகின்றனர். ஆனாலும், விமல் மற்றும் கம்மன்பில வேறுகட்சி ஆரம்பித்தாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களிடையே இன, மத, ஜாதி பேதங்களைக் கொண்டுவரும் நபர் அல்ல என, அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண, கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான மாபெரும் அபிவிருத்தி மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
அங்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் வேறு பிரிவினைக் கட்சிகள் இல்லை. ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஒரு கட்சி என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சொல்கின்றார்.
இனவாத போக்கினை உடையவர்கள் வேறு கட்சியனை ஆரம்பிக்க வேண்டுமென்று சொல்கின்றார்கள். விமல் மற்றும் கம்மன்பில எவ்வாறாயினும் வேறுகட்சியை ஆரம்பித்தாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நாட்டில் ஜாதி பேதங்களைக்கொண்டுவரும் நபர் இல்லை.
அதனால், தான் எமது மதிப்பிற்குரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வழிநடத்துவதற்கு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளோம்.
தொழில் மற்றும் காணி உரிமைகளை யாழில் உள்ள மக்களுக்கு தான் கொடுக்க வேண்டும். அவ்வாறான பலத்தினை தமிழ் மக்களுக்கு கொடுத்தால், நாடு இரண்டாக பிரியாது.
நாடு பிரிவதை தடுக்க வேண்டுமாயின் அந்த பலத்தினை கட்டாயம் கொடுத்தே ஆக வேண்டும். இந்த சிறிய இலங்கையில் இருக்கின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்த நாட்டில் இருக்கின்ற நாங்கள் அனைவரும் கலந்தாலோசித்து பேச வேண்டி இருக்கின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2016 ஆம் ஆண்டு தமிழ் மொழிக்கான விசேட சட்டம் ஒன்றினைக்கொண்டுவர இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
எமது பிரதேசத்தில் உள்ள இளைஞர்களின் பிரச்சினைகளை விட வடபகுதியில் உள்ள இளைஞர்களின் பிரச்சினை அதிகமாக இருக்கின்றது.
கடந்தகால யுத்தத்தின் பின்னர் இந்த பிரசேதத்தில் இருக்கின்ற மக்களின் பிரச்சினைகள் அதிகமாக காணப்படுகின்றது.
எமது அமைச்சின் அனைத்து நிதி ஒதுக்கீடுகளையும், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் ஊடாக அபிவிருத்தி செய்வதற்கு ஏற்பாடுகளை செய்யவுள்ளோம்.
வேலைவாய்ப்பு பிரச்சினைகளை விட தமிழ் மொழியில் பிரச்சினைகள் அதிகமாக இருக்கின்றது. அந்த பிரச்சினைகளை தெரிந்தெடுத்து, இந்தநாட்டில் இருக்கின்ற சக்தியற்றவர்களுக்கு எமது வாக்குகளைப் பெற்றுக்கொடுப்பது பொருத்தமற்றதாக இருக்காது.
இந்த மாவட்டத்தில் அங்குள்ள விமல் வீரவன்சவிடமோ, கம்மன்பிலவுடனோ முகம்கொடுக்கத் தயார் இல்லை. யாழ்.மாவட்டத்தில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுடன் தான் கரம்கோர்க்க இருக்கின்றோம்.