தமிழீழ வைப்பகத்தின் தங்க நகைகளை மீட்கும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நீதிமன்றத்தின் அனுமதியுடன் காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து தங்க நகைகளை மீட்கும் பணியை ஆரம்பித்துள்ளனர்.
கேப்பாப்புலவு லூர்த்துமாதா வீதியில் உள்ள தமிழீழ வைப்பகத்தின் தலைமைச்செயலகம் அமைந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின்போது இந்தத் தலைமைச் செயலகத்துக்கு முன்னால் உள்ள காணியின் கிணற்றுக்குள் தங்க நகைகளைப் போட்டு புதைத்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் தமிழீழ வைப்பகத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் நீதிமன்றத்தினூடாக இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய குறித்த அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகி இடையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து மீண்டும் குறித்த அகழ்வுப்பணி ஆரம்பமாகியது.
எனினும் நேற்றும் எந்தவொரு நகைகளும் மீட்கப்படாத பட்சத்தில் மீண்டும் மீட்புப்பணி ஆரம்பமாகியுள்ளது.