தமிழில் தேசிய கீதம் பாடுவதை சவாலுக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்று கூறி, உயர் நீதிமன்றம் அந்த மனுவை, இன்று (18) நிராகரித்தது.
இந்த மனு, மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது. இதன்போது, குறித்த மனு தொடர்பான சட்டமா அதிபரின் விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன. அந்த விளக்கங்களைக் கருத்திற்கொண்டே, இந்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
அரசியலமைப்பின் பிரகாரம், தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கான அனுமதி, அரசியலமைப்பு விதிமுறைகளில் காணப்படுகின்றது என, சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட விளக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.