தமிழில் என்னென்ன படங்கள் தேசிய விருதை வென்றன? முழுவிவரம்

சிறந்த படங்களுக்கான 64-வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இயக்குனர் பிரியதர்சன் தலைமையிலான குழு இதை அறிவித்தது. அதன் முழுவிவரங்களை கீழே பார்ப்போம்.

தேசிய அளவில் சிறந்த படமாக மராத்தி மொழியில் வெளிவந்த ‘காசவ்’ தேர்வு பெற்றது.

சிறந்த நடிகராக அக்‌ஷய் குமார் விருது பெறுகிறார். ‘ருஷ்டம்’ படத்தில் நடித்தற்காக இந்த விருது கிடைத்துள்ளது. இவர் பெறும் முதல் தேசிய விருது இதுவாகும்.

சிறந்த நடிகைக்கான தேசிய விருது சுரபி லட்சுமிக்கு கிடைத்து இருக்கிறது. இவர் நடித்த மலையாளபடமான ‘மின்னமினுங்கு’ படத்துக்காக கிடைத்திருக்கிறது.

மாநில படங்களுக்கான தேசிய விருதுகளில் குரு சோமசுந்தரம் நடித்த ‘ஜோக்கர்’ படத்துக்கு சிறந்த தமிழ் படத்துக்கான விருது கிடைத்து இருக்கிறது.

கவிஞர் வைரமுத்து சிறந்த பாடல் ஆசிரியருக்கான விருதை பெற்றுள்ளார். `தர்மதுரை’ படத்தில் ‘எந்த பக்கம்‘ என்ற பாடலை எழுதியதற்காக இந்த விருது கிடைத்திருக்கிறது.

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு விருது சூர்யா நடித்த ‘24’ படத்துக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் திரு சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார்.

சிறந்த பின்னணி பாடகருக்கான விருது `ஜோக்கர்’ படத்தில் பாடிய பாடகர் சுந்தர் ஐயர் பெறுகிறார். சிறந்த சினிமா எழுத்தாளர் விருது தனஞ்ஜெயனுக்கு கிடைத்திருக்கிறது.

பீட்டர் கெய்னுக்கு சிறந்த சண்டை பயிற்சியாளர் விருது கிடைத்திருக்கிறது. மலையாளத்தில் தயாரான `புலிமுருகன்’ படத்தில் அவர் அமைத்த சண்டை காட்சிக்காக இந்த விருதை பெறுகிறார்.

ஸ்டண்ட் மாஸ்டருக்கான விருது கடந்த 63 ஆண்டுகளில் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Related Posts