Ad Widget

தமிழினி எழுதிய நூலை கிளிநொச்சியில் வெளியிட அனுமதி!

விடுதலைப்புலிகளின் அரசியல்துறை மகளிர் அணியின் முன்னாள் பொறுப்பாளர் தமிழினி (சுப்ரமணியம் சிவகாமி) எழுதிய “ஒரு கூர் வாளின் நிழலில்” என்ற நூலை கிளிநொச்சியில் வெளியிடுவதற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

அந்த நூலை வெளியிடுவதற்கு காவல்துறையினர் முன்னர் அனுமதி மறுத்திருந்த நிலையில், அரசின் உயர்மட்ட அதிகாரிகளின் தலையீட்டில் தற்போது அந்த அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, இந்திய பதிப்பாக தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல், கிளிநொச்சியில் எதிர்வரும் 19-ம் திகதி சனிக்கிழமை வெளியிடப்படவுள்ளதாக தமிழினியின் கணவர் ஜெயக்குமரன் கூறினார்.

தனது நண்பர்களூடாக சில அமைச்சர்களைத் தொடர்புகொண்டு, அவர்களின் உதவியுடன் தங்களின் நூல் வெளியீட்டுக்கு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாகவும் தமிழினியின் கணவர் கூறினார்.

Related Posts