விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினிக்காக சிங்கள பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் இப்பாடல் தமிழிலும் பாடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழினி தனது உணர்வுகளை சொல்வது போன்ற வகையில் இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாடல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு லைட் ஹவுஸ் கெலேயில் இடம்பெற்றுள்ளது.
காஷ்யப்ப சத்யபீரிஸ் டி சில்வாவின் பாடல் வரிகளில் உருவாகிய பாடல், இசையமைப்பாளர் மஹிந்த குமாரினால் தமிழ் மொழியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உரேஷா ரவிஹாரியினால் பாடப்பட்டுள்ள இந்த பாடல் தர்ஷன ருவன் திஸாநாயக்க என்பவரினால் உருவாக்கப்பட்டுள்ளது.
காஷ்யப்ப சத்யபீரிஸ் டி சில்வாவினால் பாடல் அடங்கிய இறுவட்டு, தமிழினியின் கணவரான ஜேயகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் பாடல்
சிங்கள பாடல்