தமிழினத்தை முற்றாக அழிக்க தென்னிலங்கை துணிந்துவிட்டது: கஜேந்திரகுமார்

தமிழர் தாயக பிரதேசத்தை முழுமையாக ஆக்கிரமித்து, எமது இனத்தை முற்றாக அழிக்கும் அளவிற்கு தென்னிலங்கை துணிந்துவிட்டது என, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், யுத்தத்தின் பின்னர் கடந்த ஒன்பது வருடங்களாக மாறி வந்த அரசாங்கங்கள் அனைத்தும் தமிழ் மக்களின் இருப்பை தக்க வைக்கக்கூடிய பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கிலேயே செயற்பட்டது.

மாறாக எமது மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலோ அல்லது உறுதிபடுத்தும் வகையிலோ ஒருபோதும் இந்த அரசாங்கம் செயற்படவில்லை.

கடந்த 30 ஆண்டு கால ஆயுத போராட்டத்தின் போது தமிழ் இனத்திற்காக போராடியவர்கள் இன்று இல்லாத சந்தர்ப்பத்தில் தமிழர் தாயக பிரதேசத்தை முழுமையாக ஆக்கிரமித்து, எமது இனத்தை முற்றாக அழிக்கும் அளவிற்கு தென்னிலங்கை துணிந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

Related Posts