தமிழினத்திற்கு நீதி வலியுறுத்தும் எழுச்சி பேரணிக்கு ஆதரவு கோரி வாகன பவனி!

யாழ். பல்கலை மாணவர்களினால் முன்னெடுக்கப்படவுள்ள எழுச்சி பேரணிக்கு ஆதரவு கோரி வட மாகாணம் தழுவிய வாகன பவனி யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகன பவனி யாழ். பல்கலைக்கழக வளாகத்திலிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.

யாழ். மாவட்டம் முழுவதும் பயணிக்கவுள்ள இந்த வாகன பவனி, அதனை தொடர்ந்து வவுனியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு செல்லவுள்ளது.

தமிழின இழப்பிற்கு நீதி கோரி எதிர்வரும் 16ஆம் திகதி மாபெரும் எழுச்சி பேரணியொன்றை யாழ். பல்கலைக்கழக சமூகம் முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த எழுச்சி பேரணி தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆதரவைத் திரட்டும் நோக்கில் இவ்வாகனப் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts