‘தமிழர் பிரச்சினைக்கு 2017 இற்குள் தீர்வு வேண்டும்’ : இரா.சம்பந்தன்

‘தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் 2017 ஆம் ஆண்டுக்குள் தீர்க்கப்படவேண்டும்’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம், யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், பெரும்பான்மையான சிங்கள தலைவர்களும், தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருப்பதாகவும் கூறினார்.

Related Posts