தமிழர் தாயகப்பகுதிகள் ஆக்கிரமிப்பு!- ஜனநாயக ரீதியிலான கண்டனப் போராட்டத்திற்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆதரவு

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரம்பரிய தமிழ்க் கிராமங்களில், மகாவலி அபிவிருத்தி என்னும் போர்வையில் நடைபெறும் நில அபகரிப்பையும், அங்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களையும் எதிர்த்து மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவையினால் (இன்று) செவ்வாய்க்கிழமையன்று (28-08-2018) முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் (யாழ்-பல்கலை) தனது ஆதரவைத் தெரிவிப்பதுடன், தமிழர் தாயகத்தின் இதயபூமியாம் முல்லை மண்ணினைப் பாதுகாக்கும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற அணிதிரளுமாறு அனைத்துத் தமிழ் மக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றது.

நன்றி

த.சிவரூபன்
இணைச்செயலாளர்
பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்
யாழ்ப்பாணம்.

Related Posts