அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும். எனக் கோரிக்கை விடுவது நல்லதல்ல – சி.தவராசா

தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் மிக மிக முக்கியமாக அமையும் அதேநேரம் முடிந்தவரையில் மகிந்தவிற்கு தீனிபோடாமலும் நாம் செயல்பட வேண்டியதும் இன்றைய தேவையாகவுள்ளது. என வடக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள சிறைகளில் வாடும் 107 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்கப்பட வேண்டியது கட்டாயம். அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல அனைவருமே உழைக்க வேண்டியதும் கண்டிப்பானது. அதற்கமைய அவர்களின் விடிதலைக்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்காதுவிடின் அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும். எனக் கோரிக்கை விடுவது இன்னுமோர் தரப்பிற்கு தீணிபோடுவதாகவே அமையும்.

அதாவது அடுத்த வரவு செலவுத் திட்டத்தினை தோற்கடிக்க வேண்டும் என பொது எதிரணி ஒரு மக்கம் மூச்சாக செயல்படும் நேரம் நாமும் அதற்கு தூபமாக செயல்படாது எமது இனத்தின் விடுதலைக்காக செயல்பட வேண்டும். இதற்காக அணைத்து வழிகளிலும் இணைந்து போராடவேண்டிய காலம்.

 

இதேநேரம் அவர்களின் விடுதலை கிடைக்கவில்லை. ஆனால் விடுதலைகோரி குரல்கொடுக்கும் வாய்ப்பாவது கிட்டியுள்ளது. நின்மதியான வாழ்வு இல்லாது விடினும் அநுராதபுரம் வரையில் பாதயாத்திரை சென்று எமது அவலத்தை எடுத்துக்கூற ஒரு நிலமை உள்ளது. வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டு மீண்டும் மகிந்த யுகம் வருமாயின் இன்று யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் இருந்து அநுராதபுரம் வரையில் ஊரவலம்போகும் எம்மால் பல்கலைக் கழக வாசலை தாண்ட முடியாத சூழ்நிலையே ஏற்படும்.

எனவே எதிர்ப்புக்களை பலமாக்கி அழுத்தத்தை அதிகரித்து விடுதலையை பெறவேண்டும். அது மகிந்தவிற்கான வாய்ப்பாகவும் அமையாது பார்க்க வேண்டியதும் தலையாய கடமையாக உள்ளது. அதேநேரம் தமிழர் தரப்பு தொடர்ந்தும் தொடர்ந்தும் காட்டும் மென்போக்கை அரசு அசட்டை செய்தால் அதன் விளைவுகளிற்கும் அரசே பதிலளிக்க வேண்டும். என்றார்.

Related Posts