தமிழர் உரிமைகளைக் கருத்தில் கொண்டு கூட்டமைப்பு கவனமாக முடிவெடுக்கும்! -மாவை

தமிழரின் உரிமைப் போராட்டம் முக்கியமான காலகட்டத்தில் இருப்பதனால்தான் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசரப்பட்டு முடிவெடுக்காமல் உள்ளது.

mavai mp

பொது எதிரணி, அரச தரப்பு வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை உன்னிப்பாக அவதானித்த பின்னரே யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவொன்றை எடுக்கும்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்தார்.

“ஜனாதிபதித் தொடர்பில் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், மற்றும் பொது மக்களுடன் சில தினங்களில் தொகுதி ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளனர்” எனவும் அவர் குறிப் பிட்டார்.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கட்சியின் தலைமை தொடர்ந்து பேச்சுகளை நடத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அரச தரப்பில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும், பொது எதிரணி சார்பில் முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும் போட்டியிடுகின்றனர். இவர்களில் யாரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு இன்று சர்வதேச ரீதியில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts