தமிழர் இனப்படுகொலை தினம் யாழில் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் தமிழர் இனப்படுகொலை தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜலிங்கம் தலைமையில குறித்த நிகழ்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது 1996 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குழி மாணவி கிரிசாந்தி குமாரசுவாமி உட்பட அவரது உறவினர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த அஞ்சலி நிகழ்வில் பொது ஈகைச் சுடரினை மாநகர துணை முதல்வர் து.ஈசன் ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து வட.மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம, வட.மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.சுரேஸ் பிரேமசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கடந்த 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தமிழர் இனப்படுகொலை வாரம் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts