தமிழர்களை தமிழர்களே ஆள மக்களை அணிதிரட்ட வேண்டும்: த.தே.கூ

தமிழர்களை பெரும்பான்மையாகக் கொண்ட வவுனியா வடக்கு பிரதேச சபையை (நெடுங்கேணி) தமிழ் மக்களாகிய நாமே நிர்வகிக்கக் கூடிய வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்க மக்களை அணி திரட்டுமாறு வேட்பாளர்கள்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா வடக்கு பிரதேச சபையின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு நெடுங்கேணி நகரில் அமைந்துள்ள கந்தசாமி கோயிலில் விசேட பூஜை வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் பின்னர் ஜி.ரி.லிங்கநாதன் இல்லத்தில் அவரது தலைமையில் வேட்ப்பாளர்களின் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, தமிழர்களை தமிழர்களே ஆள மக்களை அணிதிரட்ட வேண்டும் என வேட்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மயூரன், வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts