தமிழர்களின் பண்பாடும் பொருளாதாரமும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன: பத்மினி

தமிழ் மக்களின் பண்பாடு, கலாசாரம், பொருளாதாரம் என்பன திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

முன்னைய தலைவர்கள் இலட்சியத்துடனும் நேர்மையுடனும் மக்களை வழிநடத்தியதாகவும், மக்களும் அவர்களுடன் கைகோர்த்திருந்ததாகவும் பத்மினி சிதம்பரநாதன் மேலும் தெரிவித்தார். எனினும், தற்போது திட்டமிட்ட இன அழிப்பு இடம்பெறுவதால் உரிமை போராட்டத்தை முன்னெடுப்பது பாரிய சிக்கலாக உள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts