தமிழர்களின் ஆதரவு தேவையில்லையென நான் கூறவில்லை – கோத்தா

இலங்கை வாழ் அனைத்து தமிழர்கள் மற்றும் சிங்களவர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவரது ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான த. சித்தார்த்தனுக்கும் தனக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் பல்வேறு போலியான தகவல்கள் வெளியாகின்றன.

அதனடிப்படையில், தமிழர்களின் ஆதரவு தனக்குத் தேவையில்லையென வெளியான செய்திகள் தவறானவையென்றும் அனைத்து தமிழ் மக்களின் ஆதரவும் தமக்கு தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றிக்கு இலங்கை வாழ் அனைத்து தமிழர்கள், சிங்களவர்களின் வாக்குகளை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பலர் தன்னுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இவ்வாறு போலியான செய்திகள் வெளியாவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தன் மீதும் நாட்டின் மீதும் அன்பு கொண்டுள்ள மக்களை திசைமாற்றிவிட முடியாதென்றும் கோத்தாபய ராஜபக்ஷவின் ஊகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts