தமிழருக்கு ஏமாற்றம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அவர்களின் அன்றாடப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் விஞ்ஞாபனத் தில் குறிப்பிடாதமை ஏமாற்ற மளிப்பதாகவே அமைந்துள்ளது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான க.சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

SURESH_PREMACHANDR

ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இடம் பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறி சேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

அதில், இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் எதுவும் குறிப்பிடப் பட்டிருக்கவில்லை. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.

‘பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளது. ஆகக் குறைந்தது, தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைக்கான தீர்வு தொடர் பிலாவது குறிப்பிட்டிருக்கலாம்’ என்றார் அவர்.

Related Posts