தமிழரின் பூர்வீக காணிகளை அபகரிக்கும் பெரும்பான்மை இனத்தவரின் முயற்சி முறியடிப்பு!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கோட்டைக் கேணிக்கு அப்பால் உள்ள தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கும் பெரும்பான்மை இனத்தவரின் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சிவந்தா முறிப்புக்குளம் பகுதி மற்றும் அதனை அண்மித்த வயல் நிலங்களையே பெரும்பான்மையினர் கையகப்படுத்த முயற்சித்துள்ளனர்.

இது தொடர்பாக கொக்குத்தொடுவாய் விவசாய அமைப்பினர், உடனடியாக வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தினர் ஆகியோருக்கு அறியப்படுத்தியுள்ளனர்.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் கமநல அபிவிருத்தித் திணைக்கள உத்தியோகத்தர்கள் உடனடியாக தலையிட்டு நில அபகரிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் ரவிகரன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோருக்கு தொலைப்பேசியூடாக தெளிவுபடுத்தியுள்ளார்.

Related Posts