தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் உட்பட நால்வர் கைது

கிளிநொச்சி தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் குறித்த நான்கு பேரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த நால்வரும் மதுபோதையில் சுயேச்சைக் குழு வேட்பாளர் ஒருவரின் வீட்டிற்கு கற்களால் எறிந்தும் வேலிகளை அடித்து உடைத்தும் அட்டக்காசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது வீட்டின் உரிமையாளர், பொலிஸ் மற்றும் தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவுக்கு முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள், சந்தேகநபர்கள் நால்வரையும் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தற்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Posts