தமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் கைது!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முப்புரம் வட்டாரத்தில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மூலக்கிழை தெரிவின் பின்னர் பொதுமகன் இருவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பொலீசாரால் தமிழரசு கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

31.03.19 அன்று முப்புரம் வட்டார தொகுதியின் மூலக்கிழை தெரிவு நடைபெற்றுள்ளது மூலக்கிழையின் தலைவராக தேவிபுரம் பகுதியினை சேர்ந்த இருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் இருவருக்கும் இடையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் ஒருவர் தெரிவாகியுள்ளார் முப்புரம் வட்டாரத்தினை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் தோல்வியுற்றுள்ளார்.

இதன் பின்னர் பொதுமகன் இருவர் மீது தாக்குதல் நடத்தியதாக புதுக்குடியிருப்பு பொலீசாரில் முறைப்பாடு செய்யப்பட்டதற்கு அiமாவாக புதுக்குடியிருப்பு பொலீசாரால் தமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Related Posts