தமிழரசுக் கட்சி என்னுடன் ஏன் கலந்துரையாடவில்லை? – சிவாஜி

சிங்கள பொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவை தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சி தன்னுடன் ஏன் கலந்துரையாடவில்லை என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.

மன்னார் தனியார் விடுதி ஒன்றில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவளிப்பதாக தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது.

தேர்தல் விஞ்ஞாபனங்களை நன்கு ஆராய்ந்ததன் பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நான் இதுவரையில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவில்லை. அவ்வாறெனில் என்னுடன் கலந்துரையாடாமல், எனது தேர்தல் விஞ்ஞாபனத்தை பார்க்காமல் எவ்வாறு முடிவெடுக்க முடியும்” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

Related Posts