தமிழரசுக்கட்சி தனித்துப் போட்டியிடாது! -சம்பந்தன்

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்றிரவு தமிழ் ஊடகவியலாளர்களை அழைத்து சமகால அரசியல் தொடர்பாக கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடடின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடாது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிலேயே போட்டியிடும் எனவும் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் தனித்துப் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தமிழரசுக் கட்சி ஒற்றுமையைத் தொடர்ச்சியாகப் பேண விரும்புகின்றது.

அத்துடன், 20ஆவது திருத்தச் சட்டத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதால் அந்தச் சட்டமூலம் அரசாங்கத்தினால் கைவிடப்படலாம் எனவும் அதனைப் பற்றி யோசிக்கத் தேவையில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts