தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் சொகுசு வாகனம் பெற்றமை உண்மையானதே – சிறீதரன்!

ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து சொகுசு வாகனம் பெற்றமை உண்மையானதே என தமிழரசுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பிரித்தானியா தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்திருக்கிறார்.

தான் முன்னாள் போராளிகள் பற்றி குறிப்பிட்டது உண்மையல்ல என்றும் தான் கதைக்கும்போது எந்த ஊடகவியலாளரும் அங்கு இருக்கவில்லை என்றும் அந்த செய்தி வேண்டுமென்றே தமது கட்சி அங்கத்தவர்களாலேயே பரப்பப்படுவதாகவும் அந்த நேர்காணலில் தெரிவித்தார்.

இந்த வாகன கையளிப்பு தொடர்பாக முதன் முதலில் செய்தியை நாம் 21.06.2015 செய்தி வெளியிட்டிருந்தோம் என்பதனை சுட்டிக்காட்டுவதோடு ஏனைய தமிழ் தேசிய ஊடகங்களாகவும் நடுநிலை ஊடகங்களாகவும் காட்டிகாள்ளும் எந்த ஊடகத்திலும் அந்த செய்தியை மூடி மறைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts