தமிழமுதம் விழா யாழ்.பல்கலையில் ஆரம்பம்!!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழமுதம் நிகழ்வு பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் இன்று காலை ஆரம்பமாகியது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் தமிழ்விழாவில் இவ்வருடம் “மொழிதனைக் கடையும் இளையவர் பயணம்” என்ற தொனிப் பொருளில் இடம்பெறுகிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் நோக்கிய எழுச்சிப் பேரணியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தமிழர் கலாசார – பண்பாட்டு அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த சிலம்பு, கரகம், பொம்மலாட்டம், புலியாட்டம், கம்படி, கரகாட்டம் மற்றும் இன்னியம் முழங்க விருந்தினர்கள் பிரதான வளாகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா, யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இ. ஆனோல்ட், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி. மணிவண்ணன், அதன் செயலாளர் செ. கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ், மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் ஆகியோரும் விருந்தினர்களாக அழைத்துவரப்பட்டனர்.

மாணவர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Related Posts