தமிழக முதல்வருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு கடையடைப்பு!

மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாண நகர வர்த்தக நிலையங்கள் அனைத்தும் இன்று பிற்பகல் 2.00 மூடுமாறு யாழ்ப்பாண வர்த்தக சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது.

இலங்கையில் தமிழ் மக்கள் அல்லலுறும்போதெல்லாம், இந்திய மத்திய அரசாங்கத்துடன் தொடர்புகொண்டு தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வந்ததோடு, தமிழக சட்டசபையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக பல்வேறு தீர்மானங்களைக் கொண்டுவந்தவர் என்பதை மறக்கமுடியாதெனவும், அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பிற்பகல் 2.00 மணியளவில் கடைகளை மூடி கறுத்தக்கொடியைப் பறக்கவிடுமாறும் வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், அத்தியாவசிய தேவையுடைய உணவகங்கள் மற்றும் மருந்தகங்களை பூட்டாமல் கறுப்பு கொடிகளை தொங்கவிட்டு அஞ்சலி செலுத்துமாறு யாழ்ப்பாண வணிகர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Posts