தமிழக மீனவர்கள் 27 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 27 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவின் தென்கிழக்கு கடற்பகுதியில் வைத்து நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் மீன்பிடி உபகரணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் இன்று(சனிக்கிழமை) மீன்வளத்துறை திணைக்கள அதிகாரிகள் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, ஒரே நாளில் 27 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் தமிழக கடலோர மீனவ கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கிறன.

Related Posts