தமிழக மீனவர்கள் மன்னார் கடலில் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கையின் கடல் எல்லைக்குள் மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் 21 இந்திய மீனவர்கள் நேற்று(28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் கடற் பிரதேசத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் அலவி அக்ரம் தெரிவித்தார். மேற்படி இந்திய மீனவர்கள் பயணம் செய்த மூன்று மீன்பிடி படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து வரப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகளுக்காக 21 இந்திய மீனவர்களும் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

Related Posts