தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி தாக்கிய கொடூரம்

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை ஆடைகளைக் களைந்து கொடூரமாக இலங்கை கடற்படை தாக்கிய சம்பவம் மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்திலிருந்து 600 க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீனவர்கள மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இவர்கள் கச்சத்தீவுக்கும் தலைமன்னாருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு (திங்கள்கிழமை) மீன்பிடித்துக் கொன்டிருந்த போது நவீன ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் அச்சுறுத்தயதோடு 100 க்கும் மேற்பட்ட படகுகளிலிருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி விரட்டியடித்துள்ளனர்.

இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள் கரை நோக்கி படகுகளை திருப்பினர். அப்போது கண்ணன், ஆரோக்கியம், செல்வராஜ், ராமசாமி, கதிரேசன் உள்ளிட்ட 5 பேர் சென்ற படகு நடுக்கடலில் மூழ்கியது. இதனையடுத்து 5 மீனவர்களும் சக மீனவர்களால் மீட்கப்பட்டு கரைதிரும்பினர்.

அதே போல நேற்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்தியதோடு படகுகளிலிருந்த மீனவர்களை நிர்வாணப்படுத்தி உருட்டுக்கடடைகளால் தக்கியுள்ளனர்.

இனிமேல் இப்பகுதிக்குள் மீன்பிடிக்க வரக்கூடாது என கடுமையாக எச்சரித்துள்ளதாகவும் ஒரே நாளில் இரண்டு முறை தாக்குதல் நடத்தியதில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் மற்றும் மீன்களை சேதப்படுத்தி கொள்யையடித்துள்ளதாகவும் மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தால ராமநாதபுரம் மாவட்ட கடலோரக்கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Posts