தமிழக மக்களுக்கு மரியாதையை உரித்தாக்குகிறேன்.. தமிழில் வாழ்த்திய சேவாக்

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு, கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளார். இரு தினங்கள் முன்பே தமிழர்களின் அறவழி போராட்டம் பாராட்டுக்குறியது என கூறி, ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு, சேவாக் தனது ஆதரவை அளித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று தமிழிலேயே, டிவிட் செய்து ஆதரவு தெரிவித்துள்ளார் சேவாக்.

“அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த மரியாதையை உரித்தாக்குகிறேன். அமைதியை தொடருங்கள். அன்புடன்” என்று டிவிட் செய்துள்ளார் சேவாக்.

சேவாக்கிற்கு டிவிட்டரிலேயே பல தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுமைக்கும் பொதுவானவர்கள் விளையாட்டு வீரர்கள். அதிலும் கிரிக்கெட் வீரர்கள் ஹீரோக்களாக பார்க்கப்படுகிறார்கள். அவர்களின் கருத்துக்கள் நாடு முழுக்க சென்று சேரும் என்பது கவனிக்கத்தக்கது.

Related Posts