தமிழக பாதிரியாரை மீட்பது குறித்த முதல்வரின் கடிதத்துக்கு மோடி பதில்

ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் பிரேம் குமாரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

modi

தமிழக அரசு சார்பில் அந்த கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாதிரியார் பிரேம் குமாரை மீட்கும் நடவடிக்கையில் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதரும், அடிக்கடி அந்நாட்டு அதிபர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு வருகிறார்.

எனது தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் தொடர்பில் உள்ளார். எனவே, பிரேம் குமாரை விரைவில் மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார் நரேந்திர மோடி.

Related Posts