தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று!

தமிழகத்தின் முதல்வராக 6-ஆம் முறையாக பதவியேற்கப் போவது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவா, திமுக தலைவர் கருணாநிதியா என்ற எதிர்பார்ப்புக்கு இன்று விடை தெரிந்துவிடும்.

15-ஆவது சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான களம் என்பது முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.

தேர்தலின்போது பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி துவங்க உள்ளது. காலை 9 மணியில் இருந்து முன்னணி நிலவரம் குறித்து தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 16 ஆம் திகதி நடைபெற்றது. அரவக்குறிச்சி, தஞ்சை தவிர 232 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 65 ஆயிரத்து 762 வாக்குச்சாவடிகளில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 596 வாக்குப்பதிவு எந்திரங்களும், 75 ஆயிரத்து 980 கட்டுப்பாட்டு எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.

தமிழகத்தில் 74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மாநிலத்திலேயே சென்னையில் தான் குறைந்தபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் தேர்தலின்போது பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றது. இதற்காக மாநிலம் முழுவதும் 68 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Posts