தமிழகம் முழுவதும் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் அதிமுக 42 சதவீத வாக்குகளுடன் முன்னிலை வகித்துள்ளது.
திமுக 29.8 சதவீதம், பா.ம.க. 6.2 சதவீத வாக்குகளும் காங்கிரஸ் 6.8 சதவீதமும் மதிமுக 0.6 சதவீதமும் தேமுதிக 2.1 பா.ஜ.க 2.1 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், பெரும்பான்மை இடங்களில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
232 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடந்து வருகிறது. இதில் பெரும்பான்மை இடங்களான 122 தொகுதிகளில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
இதனால், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரத்தின் அடிப்படையில் உறுதியாகியுள்ளது.