தமிழகம், புதுச்சேரியில் மே 16ம் தேதி தேர்தல்; மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் மே 16ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும்இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி அறிவித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதியை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி இன்று அறிவித்தார்.

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் மே 16ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும். வேட்பு மனுத் தாக்கல் ஏப்ரல் 22ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29ம் தேதி முடிவடையும். ஏப்ரல் 30ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். மே 2ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறும் கடைசி நாள்.  மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

Related Posts